நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நான்கு இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மினுவாங்கொடை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான மினுவாங்கொடை நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற பிரதான பதிவாளர் நீதிமன்றில ஆஜர்படுத்தப்பட்டபோது மினுவாங்கொடை நீதிவான் திலானி தேனபந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி சந்தேக நபரை எதிர்வருபம் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

