யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – குடாக்கனை பகுதியில் 08 ஆம் திகதி வியாழக்கிழமை கசிப்புடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 1500 மில்லி லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நால்வரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

