விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட 15,842 கிலோ கழிவு தேயிலை!

173 0

வெலம்படை, குரதெனிய வீதி பகுதியில் மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கழிவு தேயிலையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களஞ்சியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே  அங்கு வைக்கப்பட்டிருந்த  15,842 கிலோ கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக தேயிலை சபையின் கம்பளை காரியாலயத்தில் கழிவு தேநீர் தொகுதி மற்றும் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.