மரணம் அடைந்த காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதல்வர்

246 0

உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த 25 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த 25 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜி.வெங்கடேசன்; சிவகங்கை மாவட்டம், எஸ்.வி.மங்கலம் காவல் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆறுமுகம்; தேனி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆர்.விமலாஜோதி; திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கணேசன்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகர போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கணேசன்; சென்னை பெருநகர காவல், வேப்பேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கே.ராஜேந்திரன்; திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வி.சி.ரோஜாமணி; சென்னை பெருநகர காவல், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த எஸ்.முருகன் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இதேபோல், சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி.ஜெகந்நாதன்; திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.பால்சாமி; சென்னை பெருநகர காவல், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பி.அருள்; காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.சம்பத்; சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எம்.ரவிக்குமார்; திருச்சி மாநகர காவல், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராமமூர்த்தி.

மதுரை மாநகர காவல், திடீர்நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.சேகர்; சேலம் மாநகரம், தெற்கு போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.முருகேசன்; வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.ஜெயகுமார்; நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த என்.பிச்சையா; கரூர் மாவட்டம், ஆயுதப்படை மூன்றாம் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.பெருமாள் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேலும், மதுரை மாநகர், ஆயுதப்படை, 7-ம் படைப்பிரிவில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெயக்குமார்; மதுரை மாநகர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி.ரகுராமன்; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஏ.குமார்; சென்னை பெருநகர காவல், பூந்தமல்லி காவல் நிலைய சட்டம் – ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி.நடராஜன்;

காஞ்சீபுரம் மாவட்டம், காவல் கட்டுபாட்டு அறையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த டி.ஜானகி; மதுரை மாநகர், ஆயுதப்படைப் பிரிவு, 6-ம் படைப்பிரிவில் 2-ம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பி.ஸ்ரீகண்டன் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த மேற்கண்ட 25 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.