விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்!

124 0

பாதுகாக்கப்பட்ட பிரதேசமொன்றாக 2016ஆம் ஆண்டில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட விடத்தல்தீவு இயற்கைப் பிரதேசமானது, சில காலமாக பேசுபொருள்மிக்கதாக மாறியுள்ளது.

இது, இலங்கையில் பிரசித்திப்பெற்ற சதுப்புநில காடுகளைக் கொண்ட பிரதேசமாக விளங்குவதுடன் தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் புகழிடமளிக்கின்றது.

கடற்றொழில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, இப்பிரதேசத்தின் பெருமளவான பகுதியை வர்த்தமானியிலிருந்து நீக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சி தற்போது பொதுமக்களுக்குத் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு முன்மொழிவு பூர்வாங்கமாக 2007 இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தின் 1000 ஹெக்டயர் பரப்பளவை இறால் வளர்ப்பிற்காக ஒதுக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இவ்வளர்ப்பானது ஒவ்வொரு நிலையிலும் அதன் அறுவடையிலிருந்து கிடைக்கின்ற நன்மைகளை விட அதிகளவான செலவைத் ஏற்படுத்துகின்ற தோல்விக்கான பதிவையே கொண்டுள்ளது.

2019ஆம் ஆண்டில், ஏறக்குறைய நடந்தேறவிருந்த இப்பாரியளவான அழிவை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக,  சுற்றுச்சூழலியலாளர்கள் ஒன்றுசேர்ந்து ஊடக மாநாடொன்றைக் கூட்டினர்.

 

இத்தகைய ஆரம்ப கட்ட முயற்சியானது அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளைப் பிற்போடுவதற்கு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியதுடன் எந்தவொரு நிலங்களையும் இறால் வளர்ப்பிற்காக ஒதுக்குகின்ற நடவடிக்கையைத் தடுத்தது.

எவ்வாறாயினும், அண்மைக் காலமாக அரசாங்கம் அதே நோக்கத்திற்காக மீண்டும் ஆர்வத்தைக் காட்டுகின்ற சமிக்ஞைகள் தென்படுகின்றன.

இக்கருத்திட்டமானது மீளமுடியாத அழிவொன்றை சூழல் அமைப்பிற்கு நிச்சயமாக ஏற்படுத்தக்கூடும் என்பதால், இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தடுக்கவேண்டியது கட்டாயமாகும்.

இதற்காக, சதுப்புநிலக் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் இறால் பண்ணை மூலம் ஈட்டக்கூடிய வருமானத்தை விட மிதமிஞ்சிய வருமானத்தை பெற்றுத்தருகின்ற மாற்று நடவடிக்கைகள் பற்றியும் அறிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும்.

விடத்தல்தீவு இயற்கைப் வனப்பிரதேசமானது செறிவான கண்டல் தாவரங்களின் வளர்ச்சியைக் கொண்டுள்ளதோடு மாத்திரம் அல்லாமல் கடற்பசுக்களின் வாழ்விற்கு அத்தியாவசியமாக காணப்படும் கடற்புற்களின் வதிவிடமான சமுத்திரத்தின் ஆழமற்ற பகுதிவரை இப்பிரதேசம் நீடிக்கப்படுதல் என வேறு சில காரணங்களால் தனித்துவமிக்க சூழலொன்றாகக் காணப்படுகின்றது.

அருகிவரும் இனங்களாக கடற்பசுக்கள் காணப்படுவதனால், முன்மொழியப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் கடற்புற்களினுடைய முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் என்பது உலகளாவிய ரீதியில் சுற்றுச்சூழலியலாளர்களினதும் பொதுமக்களினதும் கரிசனையை அதிகரிக்க உதவும்.

 

இதற்குமேலதிகமாக, சதுப்புநில உயிரினங்கள் என நோக்கினால், சதுப்புநிலச் சூழல் அமைப்பானது வழமையாக ஆழியிலிருந்து மணற்குன்றுகளால் வேறாக்கப்படாதுள்ளது. இம்முக்கியத்துவத்திற்கான மற்றுமொரு காரணம் இவ்வியற்கைப் வனப்பிரதேசம் பாரியளவான பறவை இனங்களுக்கு புகழிடமளிக்கின்றமையாகும். இப்புகழிடமளித்தல் என்பது கீழே பட்டியலிடப்பட்ட முக்கியமான இரு காரணங்களால் நிகழ்கின்றது.

விடத்தல்தீவு இந்தியாவை அண்மித்து காணப்படுவதனால் இது பறவைகளின் புலம்பெயர்வை ஊக்குவிக்கின்றது.

பறவைகளுக்கான உணவின் ஒரு பாகமாக காணப்படும் கடலுக்கடியில் வாழும் நுண்ணங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சேற்றுத்தளத்தை இப்பிரதேசம் கொண்டுள்ளது.

2011 இல், இப்பிரதேசத்தில் 1.2 மில்லியன் பறவைகள் புலப்பட்டதாக கூறப்படுவதுடன் இதுவே ஒரே தடவையில் காணக்கிடைத்த உலகின் இரண்டாவது பாரியளவான பறவைகளின் எண்ணிக்கையாகும். இச்சம்பவமானது இப்பிரதேசத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான நிகழ்வுகளிலொன்றாக இருப்பதனால் இப்பிரதேசத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டிய அவசியத்தையும் நிருபீக்கின்ற சான்றாக இச்சம்பவத்தை பயன்படுத்தலாம் என்பது உண்மை.

இப்பிரதேசமானது இறால்களும் வேறு சில ஓடுடைய உயரினங்களும் இயற்கையாக இனப்பெருக்கம் செய்துகொள்ளக்கூடிய பிரதேசம் என அறியப்படுகின்றது. அத்துடன், வெளிநாட்டு கடலுணவுச் சந்தையில் பாரியளவான கேள்வியைக்கொண்ட யாழ்ப்பாண நண்டுகளையும் இப்பிரதேசத்தில் காணலாம். இத்தகைய நண்டுகளை ஏற்றுமதி செய்தல் என்பது நாட்டிற்குள் பாரியளவிலான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்கு உதவிபுரியும்.

அதேவேளை, இப்பிரதேசத்தின் நிலையான குடித்தொகையாக காணப்படுகின்ற அனைத்து விதமான ஓடுடைய இயற்கை உயிரினங்களையும் அரிதாக அறுவடைசெய்தால் அவற்றை வருமானத்தை ஈட்டுவதற்காகப் பயன்படுத்தலாம். எவ்வாறாயினும், நீண்ட காலப்போக்கில் இறால் வளர்ப்பு சூழலை அழிக்குமென அறியப்படுவதனால் இத்தகைய இறால் வளர்ப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் என்பது தோல்விக்கு மட்டுமே இட்டுச்செல்லும்.

இத்தகைய காரணங்களுக்காக, இறால் வளர்ப்பிற்கு விடத்தல்தீவு பிரதேசம் பொருத்தமற்றதென்பதை இக்கருத்திட்டம் பற்றிய கலந்துரையாடலொன்றின் போது தொழில்நுட்பக் குழு உணர்ந்துள்ளது. மேலும், இப்பிரதேசத்தை நன்னீர் மீன் இனங்களுக்கான சொர்க்காபுரியாகவும் கருத்திற்கொள்ள முடியும். இவ்வியற்கை ஒதுக்குப் பிரதேசம் இருப்பதால் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நன்னீர் மீன்களானது விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்ற அனைத்து வகைகளிற்கும் பொதுவாக காணப்படுவதன் காரணமாக இவை இயற்கையை சமநிலைப்படுத்துவதற்கு முக்கியமானதொன்றாக விளங்குகின்றன.

கடற்றொழில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம் வெற்றியை நோக்கி காணப்பட்டால், பெறுமதியற்ற இக்காணித் துண்டு இறுதியாக பயனற்றுப்போகக்கூடும். எடுத்துக்காட்டாக, இலங்கையில் இறால் வளர்ப்பிற்காக 33 சதவீதமான சதுப்புநில வனப்போர்வை 1980களில் அழிக்கப்பட்டது. இவ்வழிவு எமது நாட்டில் சுற்றுலாப்பயணிகள் கவருமிடங்களின் ஒன்றான பவளப் பாறைகள் சிலவற்றின் அழிவிற்கும் வழிவகுத்தது. அதேபோன்று, கடற்றொழில் கருத்திட்டத்திற்காக விடத்தல்தீவுப் பிரதேசத்தை வழங்க நேரிட்டால், இலங்கையர்களாக நாம் இயற்கை சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பொன்றை இழக்க நேரிடும்.

எவ்வாறாயினும், எமது நாட்டின் மொத்த நிலப்பரப்பு பிரதேசத்தின் 01 சதவீதமாக மட்டும் கணிப்பிடப்படுகின்ற இத்தகைய சதுப்புநில காடுகளின் பெறுமதி இத்துடன் முடிவடையவில்லை. இப்பிரதேசமானது சுனாமி மற்றும் கடலோர மண்ணரிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கெதிரான தடுப்பாகவும் உதவுபுரிகின்றது என்பதற்கான சான்று காணப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக, நெற்பயிர்ச்செய்கை மற்றும் சேனைப்பயிர்ச்செய்கை என்பவற்றின் போக்குகளைப் போன்று கடற்றொழில் கருத்திட்டமும் இப்பிரதேசத்தில் வரக்கூடும். இதுவும் இக்கருத்திட்டத்தை நிறுத்துவதற்கான மற்றுமொரு காரணமாகும். அடுத்து, இறால் வளர்ப்பின் பின்விளைவொன்றாக வெளிவருகின்ற இரசாயனங்களால் இப்பிரதேசத்திற்குரிய மீன்களுக்கு மத்தியில் பரவுகின்ற நோய்களின் அச்சுறுத்தல்களுக்கான சாத்தியமும் இங்கே காணப்படுகின்றன.

முடிவுரையாக, நீண்டகாலத்தில் கருத்திட்டத்தால் ஏற்படும் அழிவுகளை அதிலிருந்து கிடைக்கின்ற அனுகூலங்கள் நிச்சயமாக ஈடுசெய்யாது என்பதால் பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தின் பாரியளவான பரப்பை வர்த்தமானியிலிருந்து நீக்குவதன் மூலம் விடத்தல்தீவுப் பிரதேசத்தின் இறால் வளர்ப்பு கருத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தல் என்பதை பிரதிகூலமிக்கதாக கருத்திற்கொள்ளலாம்.

 

நிசாலி தயானந்த