தந்தையை அடித்துக் கொன்ற மகன்

166 0

பதுளை வெவெஸ்வத்த பிரதேசத்தில் மகன் ஒருவர் தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.

பதுளை வெவஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலையைச் செய்த 34 வயதுடைய சந்தேக நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஊமையர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை இன்று (27) நடைபெறவுள்ளது.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.