குறியீடு இணைய ஆதரவில் யேர்மனியில் தமிழீழ தேசியத் தலைவரின் அகவைநாள் நிகழ்வு.

377 0

தமிழீழ தேசியத் தலைவரின் 68 ஆவது அகவைத் திருநாளின் வாழ்த்தினை பெருமளவு மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்திய நிகழ்வு யேர்மனின் “போகும்”(Bochum) நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

“குறியீடு” இணைய ஆதரவில் புலம்பெயர் ஈழத்தமிழர்களின், குறிப்பாக இளையோர்களின் மனமகிழ்வின் வெளிப்பாடாக அமையப்பெற்ற இந் நிகழ்வில், தேசியத் தலைவரின் ஆளுமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், தலைவரது தத்துவார்த்த வார்த்தைகளைத் தழுவிய கவிதைகள், உரைகள் என்பனவும் இடம்பெற்றன.

சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அரங்கில் தலைவரது அகவைநாள் வாழ்த்தின் அடையாளமாக, இளையோர்களால் கட்டியம் வெட்டி, இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்வித்தனர்.

தமிழ்த்தேசிய மக்களின் அரசியல் அபிலாசைகளையும், உலக விடயங்களையும் தாங்கி வெளிப்படுத்தி வரும் குறியீடு இணையம் இனிவரும் காலங்களில் யேர்மனியின் பல்வேறு இடங்களிலும் இவ்வாறான நிகழ்வை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.