தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனது 68 வது பிறந்த தின நிகழ்வுகளால் வடமராட்சி நேற்றிரவு முதல் வெடிச்சத்தத்தினால் அதிர்ந்தவண்ணமிருந்தது.
இதனிடைய வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர் சதீஸ் என பலரும் திரண்டு பிறந்த தினக்கொண்டாட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.
சிறிலங்கா படைகள் வீதியெங்கும் குவிந்திருக்க இளைஞர்கள் திரண்டு வெடிகளை வெடிக்க வைத்தும் சிற்றுண்டிகளை வழங்கியும் பிறந்த தின நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.


