மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்த தம்பதிக்கு நிதி உதவி

19 0

ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்த மஸ்கெலியா புரன்வீன் ராணிதோட்டதை சேர்ந்த 31 வயதான கிருஷ்ணகுமார் பாக்கியலட்சுமி, என்ற இளம் தம்பதியினரின் குடும்ப நிலைமையை கருத்திற் கொண்டு அவர்களுக்கு உதவித் தொகையான முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ‘சமூக ஜோதி’ வாமதேவன் தியாகேந்திரனினால் முதற் கட்டமாக இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.