40 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

22 0

பொலிஸ் மா அதிபரின் கட்டளைக்கு அமைய நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் நேற்று (24) காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, 40 லிட்டர் கசிப்புடன் இரண்டு சந்தேக நபர்கள் மாதகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து 30 லிட்டர் மற்றும் 10 லிட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.