கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு வீட்டில் தங்க நகைகளை திருடியவர் மாளிகாவத்தையில் கைது!

77 0

கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள வீடு ஒன்றில்  26 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை  (24)  24  மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாளிகாவத்தை பகுதியில் உள்ள தனது நண்பரின் வீடு ஒன்றில் மறைந்திருந்தபோதே  சந்தேக நபர் திருடிய 16 1/2 பவுண் தங்க நகைகளுடன்  கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் கூறினர்.

இந்த சந்தேக நபர்  திருட்டுப் போன வீட்டின் உரிமையாளர்களின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (23) குறித்த வீட்டில் இடம்பெற்ற விருந்துக்கு  சந்தேக நபர்  வந்திருந்த போதே திருடியுள்ளமை தெரிய வந்துள்ளது.