தீக்குள் ஆழ்ந்த தியாகப் பிறவிகள்! -அகரப்பாவலன்.

90 0

தீக்குள் ஆழ்ந்த தியாகப் பிறவிகள்!
—————————————————
மாவீரர் நாள்
நெருங்க! நெருங்க!
அழ்மனதை உலுக்கிடும்
காட்சிகள் விரிகின்றன…

சுற்றிச் சூழ்ந்த
கொடுங் கோலர் படை…
பற்றி எரியும்
தமிழர்கள் சொத்துக்கள்
பரவி அமிழ்த்தும்
கந்தக நெடில்…

குஞ்சுகள் பிஞ்சுகள்
முதியோர்கள் , இளையோர்கள்
ஓங்கிய ஓலக்குரல்கள்…

நெருப்பின் சன்னதம்
கருக்கி வேரருக்கும் நிலை
இதன் மத்தியில்தான்
நம் வீரர்கள்
தளராது நின்று களமாடினார்கள்…

புலிவீரம் உச்சம்
தொட்ட நேரம்…
சாவோடு மோதி
சாகாவரம் பெற்ற நேரம்…

எமக்காக வாழ்ந்து!
எமக்காக போராடி!
எமக்காக உயிரீந்து!
எம்மோடு கலந்தவர்!

மாவீரர் தியாகத்தை
நெஞ்சினில் ஏற்றுவோம்..
மாவீரரின் இலட்சிய
தடம் செல்வோம்.
-அகரப்பாவலன்-