நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய்தூளை வீசி தங்க நகைகள் அடங்கிய பெட்டி கொள்ளை

151 0

அக்குரஸ்ஸ நகரிலுள்ள நகைக்கடை ஒன்றுக்குச் சென்ற ஒருவர், நகைக்கடை உரிமையாளர் மீது மிளகாய் தூளை  வீசிவிட்டு சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடங்கிய பெட்டியைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை துரத்திச் சென்றபோதும் குறித்த நபர்  மோட்டார் சைக்கிளில்  தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் தங்க நகை விற்பனை நிலையத்தில் கொள்ளையடிப்பதற்கு முன்பு   நகரில்  நடமாடிய காட்சிகள்  சிசிரிவி கமெராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.