அமெரிக்காவில் விமானம் வீழ்ந்து 4 பேர் பலி

87 0

அமெரிக்காவில் விமானம் நொறுங்கி வீழ்ந்து 4 பேர் உயிரிர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலம் ஸ்னோஹோமிஷ் நகரில் உள்ள ஹார்வி பீல்ட் விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 4 பேர் இருந்துள்ளனர்.

 

கிளம்பிய சிறிது நேரத்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென உடைந்துள்ளது. அதை தொடர்ந்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் வீழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், இது குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.