அதிவேக நெடுஞ்சாலையில் சேவையிலீடுபடும் பஸ்களின் வேலை நிறுத்த முஸ்தீபு கைவிடப்பட்டது!

195 0

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் சேவையிலீடுபடும் பஸ்கள் இன்று (20)  இரவு முதல் முன்னெடுக்கவிருந்த  வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்க நடவடிக்கை இமைப்பின் தலைவர்  சம்பத் ரணசிங்க தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படும் அதிக டெண்டர் (ஏலக் கட்டணம்)  கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணக்கம் தெரிவித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.