ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு நீதவான், இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
ஓமான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்கடத்தலில் ஈடுபடுவடுவதாகக் கூறப்படும் குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

