பிரிந்து செயற்பட்டு சர்வதேசத்தின் சதித்திட்டங்களுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம்

192 0

ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே தேசம் என்ற ரீதியில் எமக்கு நாட்டை மீள எழுப்ப முடியும். அவ்வாறு இல்லாமல் பிரிந்து செயற்பட்டால் தொடர்ந்து பிச்சிசை எடுக்கும் நிலையே ஏற்படும். நாங்கள் பிரிந்து செயற்படுவதையே சர்வதேசமும் எதிர்பார்க்கின்றது.

அதனால் சர்வதேசத்தின் சதித்திட்டங்களுக்குள் நாங்கள் சிக்கிக்கொண்டு நாட்டை அழித்துவிடக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுதந்திரத்துக்கு பின்னர் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவு செலவு திட்டமாகவே இந்த வரவு செலவு திட்டத்தை நாங்கள் காண்கின்றோம்.

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து, போதுமான வருமானம் எதுவும் இல்லாத நிலையிலேயே ரணிவ் விக்ரமசிங்க வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றார்.

கடந்த காலங்கள் போன்று நிவாரணங்களை வழங்கும் வரவு செலவு திட்டமாக இது அமையவில்லை.

அத்துடன் கடந்த காலங்களில் நாட்டில் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். நாடு வங்குராேத்து என அறிவித்ததன் வினைவாகவே இந்த நிலை ஏற்பட்டது. நாடு வங்குராேத்து என யாருக்கும் தெரிவிக்க முடியாது.

அவ்வாறு தெரிவிப்பதற்கு அரசியலமைப்பில் எந்த அதிகாரமும் இல்லை. என்றாலும் அதிகாரிகளின் நடவடிக்கையால் மக்கள் பிரதிநிதிகளே பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் எமது நாடு 6.1 பில்லியன் டொலர் கடன் செலுத்த இருந்தது.

கடந்த ஏப்ரல் மாத்தில் 3பில்லியன் கடனை அரசாங்கம் செலுத்தியுள்ளது. 70 பில்லியன்டொலர் கடன் செலுத்த இருக்கின்றது. அது சீனாவின் கடனாகும். ஆனால் சீன கடனுக்கு எதிராக செயற்பட்டதால் அதன் பாதிப்பு மக்களுக்கு ஏற்பட்டது.

வங்கிகள் கடன் பற்று பத்திரம் விநியோகிக்க மறுத்ததால் 3மாதங்கள் எரிபொருளை முறையாக கொண்டுவர முடியாமல் போனது.

அதனால் மக்கள் வரிசையில் இருக்கவேண்டி ஏற்பட்டது. கடன் அடிப்படையில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டதே இதற்கு காரணமாகும்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டனர். இதனை பொருத்துக்கொள்ள முடியாமலே வீதிக்கிறங்கி, மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளை எரித்தனர்.

அதனால் இந்த நிலை மீண்டும் ஏற்படாதவகையில் நாட்டை முற்றேற்றப்பாதைக்கு கொண்டுசெல்வது பாராளுமன்றத்தின் கடமை. அதற்காக ஜனாதிபதி எடுத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும். அரசியலில் நாங்கள் பிரிந்து செயற்படலாம்.

ஆனால் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் நாங்கள் பிரிந்துசெயற்டப ஆரம்பித்தால் பாராளுமன்றத்தில் 225பேருக்கும் எதிராகவே மக்கள் குறை கூறுவார்கள்.

அத்துடன் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நட்டத்தில் இயங்கிவரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருசில அரச நிறுவனங்களில் இருக்கும் தலைவர்கள் இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்று வருகின்றனர்.

அவர்கள்தான் இந்த நிறுவனங்கள் லாபமடைந்து வருவதாக தெரிவித்து, அதனை மறுசீரமைப்புக்கு எதிராக  செயற்பட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமும் நட்டத்திலேயே  இயங்குகின்றது.

அதனால் வியாபாரத்தில் இருந்து பாராளுமன்றம் முற்றாக விலகவேண்டும். அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்கி, பாராளுமன்றம் அதற்கு வரி அறவிடவேண்டும்.

இல்லாவிட்டால் நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் இருக்கும்போது மக்கள் பிரிதிநிதிகள் தொழில் கேட்டு வரும்போது, எப்படியாவது தொழில் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதன் காரணமாக இன்று அரச நிறுவனங்களில் மேலதிக ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் 17 விமானங்களே இருக்கின்றன.ஆனால் 7ஆயிரம் ஊழியர்கள் இருக்கின்றனர். 100 விமானங்கள் இருக்கும் நிறுவனங்களில் 2ஆயிரம் ஊழியர்களே இருக்கின்றனர். இப்படி இருக்கையில் எவ்வாறு இந்த நிறுவனங்களை நிர்வகிக்க முடியும்.

எனவே நாடு தற்போது முகம்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு எல்லோரும் இணைந்து 2048வரை தேசிய கொள்கை அமைக்கவேண்டும். அதன் மூலமே நாட்டை பாதுகாக்க முடியும். அதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்றார்.