சிகரெட் தொடர்பில் வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் – சந்திம வீரக்கொடி

170 0

சிகரெட் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களை வரி விலக்கில் இருந்து விடுவித்துள்ளது.

சிகரெட் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி விதித்தால் இவ்வருடத்தில் மாத்திரம் சுமார் 50 பில்லியன் ரூபா அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே சிகரெட் தொடர்பில் வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (நவ.17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு மிக மோசமான சவால்களை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடையும் வகையிலான வரவு செலவுத் திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். நெருக்கடியில் தீர்வு காண அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.