வடக்கு மாகாண ஆளுநர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம்

170 0

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (16) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை, வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் போது ஆராய்ந்தார்.

இதன்போது சிறைச்சாலையின் உயர்நிலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.