பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான தொழிலதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (16) மாலை திகன பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான வர்த்தகர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

