2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் மூலம் மதுபான உற்பத்திகளின் தரத்தை பரிசோதிப்பதற்காக புதிய ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கலால் திணைக்களத்தின் கீழ் இந்த புதிய ஆய்வு கூடம் நிறுவப்படவுள்ளதாக தெரிவித்தார்.
நியமங்களை தயாரிக்கும் நிறுவனம் இல்லாத நிலையில், மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானத்தை இனங்கண்டு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முறையற்ற மதுபானம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது கடினம் என்பதன் அடிப்படையில் இந்த ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்படி, இந்த புதிய ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

