ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

256 0

கல்கிஸை பிரதேச  ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற  உபசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் அங்குள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிய இளைஞர் ஒருவர் மூழ்கி உயிரிந்துள்ளார். 

12 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்தபோது அவர் மதுபானம் அருந்தியிருந்தமை தெரிய வந்துள்ளது.

வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.