15 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செயதார் எனக் கூறப்படும் 28 வயதான நபரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டியில் வசிக்கும் குறித்த மாணவி பாடசாலை சீருடையில் நுவரெலியாவில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரு திருமணங்களை செய்து கொண்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு தங்குமிட வசதி வழங்கிய ஹோட்டல் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்

