கோப்பாபுலவு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும்-ஜே.வி.பி

110 0

கோப்பாபுலவு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.

ஜே.வி.பியின் முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தங்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்த கோரி, கோப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கோப்பாபுலவு மக்களின் பிரச்சினையை அரசாங்கம் விரைவில் தீர்க்காதுவிடத்து பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.