வவுனியா கற்குள பகுதி வீட்டுதிட்டத்தில் புறக்கணிப்பு

72 0
வவுனியா பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட  ஆசிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள  270 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தாம் வீட்டுத்திட்ட விண்ணப்பத்தில் புறக்கணிக்கப்படுவதாக விசனம் தெருவிக்கின்றனர்.
குறித்த கற்குளம் பகுதி மக்கள் கடந்த பல வருடங்களாக சிதம்பரபுரம் நலன்புரி நிலையம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரிநிலையங்களில் வசித்து வந்து கடந்த 2007 ம் ஆண்டு கற்குளப்பகுதியில்  ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான அரை நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கி மீள்குடியேற்றப்பட்டிருந்தனர். தற்போது மீள்குடியேற்ற அமைச்சினால் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள்  மக்களிடம் இருந்து கோரப்படுகின்ற நிலையில் கற்குளப்பகுதியை சேர்ந்த 270 குடும்பங்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பத்தினை வவுனியா  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஏற்க மறுக்கின்றனர்.எனவே இந்த விடயத்தில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.