புழக்கத்திலுள்ள சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் கவனம் தேவை !

166 0

சமூகத்தில் புழக்கத்தில் உள்ள  சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை பேராசிரியர் நெரஞ்சி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்யாவிட்டால், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் , நாட்டில்  அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட  தரப்புக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் முறையான பொறிமுறை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.