பழனிச்சுவாமிக்கும் தனபாலுக்கும் வலுக்கும் எதிர்ப்புகள்

343 0

திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம், காங்கிரஸ் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை புறந்தள்ளி தமிழக சட்ட மன்றத்தில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பதவியை உறுதிசெய்து கொண்ட எடப்பாடி பழனிச்சுவாமிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை இரகசியமாக மேற்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்;ட கோரிக்கையை புறந்தள்ளி வெளிப்படையாக மேற்கொண்ட சபாநாயகர் தனபாலுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு எதிர்ப்பை வெளியிடும் தரப்பினரும் நடிகர் கமலஹாசனும் உள்ளடங்குகின்றார்.

பழினிச்சுவாமியை முதல்வராக ஏற்றுக்கொண்ட சட்டசபை உறுப்பினர்களுக்கு தொகுதி மக்கள் உரிய வரவேற்பு அளிப்பார்கள் என அவர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறையில் உள்ள சசிகலா தமிழகத்தை இயக்கும் வகையில் அவருக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சித்தார்த், தமிழக மக்கள் தமது உணவில் அதிக உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பன்னீர்ச் செல்வத்திற்கு ஆதரவளிப்பாளர்கள் என்பதை தெரிந்துக்கொண்ட வீ.கே சசிகலா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூரில் விருந்தகம் ஒன்றில் தடுத்துவைத்திருந்தார்.

இவ்வாறு கடந்த 10 நாட்களுக்கு மேல் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் நேற்றைய தினமே, நேரடியாக சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.