மௌசூலில் பாரிய தாக்குதல் ஆரம்பம்

249 0

மௌசூலின் மேற்கு பிரதேசத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை வெளியேற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கிய பிரதமர் ஹெய்டர் அல்-அபடி அறிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இன் இறுதி பலம்வாய்ந்த தளமாக திகழ்ந்த மௌசூல் நகரத்தின் கிழக்கு பகுதி கடந்த வருடம் மீட்கப்பட்டது.

அரசாங்க துருப்பினரும் அரசாங்க ஆதரவு படைத்தரப்பினரும் இணைந்து மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கை மூலம் இந்த பிரதேசம் ஈராக்கின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ஆனால், மௌசூலின் மேற்கு பிராந்தியத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது கடினமான சவாலான விடயம் என நம்பப்படுகின்றது.

இந்த நிலையில், நகரத்தினுள் அகப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொது மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இராணுவ நடவடிக்கை குறித்த துண்டுப் பிரசுரங்கள் வாநூர்தி மூலமாக வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஈராக்கிய துருப்பினர் மௌசூல் நகரினை சுற்றி வளைத்துள்ள நிலையில், அமெரிக்கா தலைமையிலான யுத்த வாநூர்திகள், ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகளை தாக்க ஆயத்தமாகிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.