முகநூல் பதிவால் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள்

193 0

ஊடகவியலாளர்கள் தரிந்து உடுவேகெதர மற்றும் தரிந்து ஜயவர்தன ஆகியோரை கடந்த 8 ஆம் திகதியும் எதிர்வரும் 14 ஆம் திகதியும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளமான முகநூலில் பதிவு ஒன்றை பகிர்ந்த குற்றச்சாட்டில் இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உயர் மட்ட உத்தரவுக்கு அமைய இந்த ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.

இப்படி செயற்படுவது பயங்கரமான நிலைமை. அரசாங்கம் இப்படி தொடர்ந்தும் செயற்பட்டால், எதிர்காலத்தில் மேலும் போராட்டங்கள் நடக்கும். ஊடகங்களுக்கு தொந்தரவு கொடுப்பதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும் மயந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.