பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரகளின் வீட்டை சுற்றிவளைத்த பளை பொலிஸார் 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 5 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, தர்மபுரம், பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைதானவர்களை இன்று (10) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

