ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளரான ‘நெடுந்தீவு லக்ஸ்மன்’ என அழைக்கப்படும் நாகேந்திரர் லட்சுமண ராஜா இன்று வியாழக்கிழமை (நவ 10) காலமானார்.
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தொல்பொருள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உத்தியோகத்தரும் ஆவார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் தேசிய பத்திரிகைகளிலும் இவர் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார்.

