வெட் வரிக்கு பூரண ஆதரவு – அமைச்சர் திகா

382 0

digaஅரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ள வெட் வரி திருத்த சட்டமூலத்திற்கு தமது முழு ஆதரவையும் தருவதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வரி அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுமாயின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டும்.

புறக்கோட்டை வர்த்தகர்கள் கூட்டு எதிர்கட்சியினரின் தேவைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹட்டன் நகரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.