சுங்கம், இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் திணைக்களங்களில் காணப்படும் 1,538 வெற்றிடங்களுக்கு தற்போது அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தற்போது சுங்கத் திணைக்களத்தில் 773 வெற்றிடங்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 434 வெற்றிடங்களும் உள்ளன. கலால் திணைக்களத்தில் 331 வெற்றிடங்கள் காணப்படுகினறன. ஓய்வுபெறும் வயது 65ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று துறைகளிலும் பணி புரியும் அனுபவம் ஒரு குழுவினர் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற உள்ளனர்.
இந்தத் திணைக்களங்களின் சேவை விதிகள் மீறப்படாத வகையில் அமைச்சரவை மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் போட்டிப் பரீட்சை மூலம் இந்த ஆட்சேர்ப்புகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

