ஐநாவின் கொப் 27 காலநிலை மாற்ற மாநாட்டில் மாலைதீவின் சபாநாயகர் முகமட் நசீட் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்தமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எகிப்தில் இடம்பெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நசீட் புறப்பட்டவேளை அவர் இலங்கையின் தேசிய பிரதிநிதிகளை பிரதிநிதித்துவம் செய்வார் என மாலைதீவு நாடாளுமன்றம் அறிவித்திருந்தது.
மாலைதீவின் முன்னாள் சட்டமா அதிபர் முகமட் முனாவர் இது குறித்து கடும்எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். சபாநாயகர் பதவிக்காக மாலைதீவு நாடாளுமன்றத்தின் சம்பளத்தை பெறும் ஒருவர் இன்னொரு நாட்டினை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு எங்கே நாட்டிற்கு விசுவாசம் என்ற விடயம் எங்கே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூமும் டுவிட்டரில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

