நைஜீரிய பிரஜைகளுக்கு இலங்கையில் விளக்கமறியல்

379 0

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இலங்கைளில் இருந்து நிதிமோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் 10 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்றைய தினம் கடுவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவர்கள் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்துள்ளனர்.

இந்தநிலையில், மாலபே, தெஹிவளை, கல்கிஸ்சை ஆகிய நகரங்களில் உள்ள வர்த்தகர்களுடன் இவர்கள் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர்கள் மாலபே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.