கைதான மு.க.ஸ்டாலின் விடுவிப்பு

349 0

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சட்டசபையில் தி.மு.கவினர் அமளியில் ஈடுபட்டதால் 2 முறை சட்டசபை ஒத்திவைக்கபட்டது. பின்னர் சட்டசபை கூடியதும் தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றபட்டனர். அதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அவைக்காவலர்கள் எங்களை ஷூ காலால் உதைத்து, தாக்கி துன்புறுத்தினர்,. இதில் எனது சட்டை கிழிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேர்மையாக நடைபெறவில்லை. எனவே இதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க செல்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன் படி  மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்தித்து புகார் அளித்தார்.

பின்னர் மெரினா கடற்கரை சென்று  காந்தி சிலை அருகே செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். தர்ணாவில் ஈடுபட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். துரைமுருகன்,ஐ.பெரியசாமி,சக்கரபாணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலாப்பூர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினர் விடுவிக்கப்பட்டனர். துரை முருகன்,சக்கரபாணி,ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்பட வேண்டும் என்றும், இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று முகநூலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ் ஸ்டாலின் கருத்து பதிவு செய்துள்ளார்.