வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீக்கிரை

351 0

கொதடுவ ஐ.டீ.எச்.  வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று இன்று நண்பகல் திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீயினால் வாகனத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் இந்த தீயைக்  கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் ஐ.டீ.எச். பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.