நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியை தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
மெரினாவில் தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம்
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் கனவுகளை நினைவேற்றுவதே எங்களது குறிக்கோள். குடிநீர் பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை வழங்கப்படும்.
அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற என்ணத்துடன் திமுக செயல்பட்டது. தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திமுகவுடன் ஐக்கியமாகிவிட்டனர். அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. பிரதமரை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
நீட் தேர்வு சட்டமசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்படும். வறட்சி குறித்து புள்ளி விவரங்களை சேகரித்த பின் பிரதமரை சந்தித்து உரிய நிதி பெறுவோம் என அவர் கூறினார்.

