வாள்வெட்டு சந்தேகநபர் கைது

186 0

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் உரிமையார் மீது கடந்த ஓகஸ்ட் மாதம் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

நான்கு பேர் கொண்ட கும்பலால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் ஏற்கனவே நீதிமன்றில் சரணடைந்த நிலையில், பிரதான சந்தேக நபரையும் ஏனையர்களையும் பொலிஸார் தேடி வந்தனர்.

பிரதான சந்தேக நபர் நேற்றைய தினம் யாழ் நகரப் பகுதியில் நடமாடிய போது, யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸிரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.

கைதானவர் தெல்லிப்பழையைச் சேர்ந்த 34வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.