பொலிஸார் உடல் ரீதியில் இடையூறு: ஹிருணிகா உள்ளிட்ட 3 பெண்கள் முறைப்பாடு

228 0

ஆர்ப்பாட்டத்தின் இடையே பொலிஸார் தமக்கு தேவையற்ற விதத்தில் உடல் ரீதியிலான இடையூறுகளை விளைவித்ததாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமசந்ர உள்ளிட்ட 3 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அவர்கள் இவ்வாறு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி மருதானை எல்பிஸ்டன் திரையரங்கு அருகே இருந்து அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்ட பேரணி நடாத்தப்பட்டது.

இதன்போதே பொலிஸார் இவ்வாறு உடல் ரீதியிலான  இடையூறுகளை தமக்கு விளைவித்ததாக ஹிருணிகா உள்ளிட்டோர், சில பொலிசாரின் சீருடை இலக்கங்கள், வீடியோக்களையும் இணைத்து இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முன் வைத்துள்ளனர்.