6 மாணவிகள் துஷ்பிரயோகம் : சந்தேகநபர் மனைவியுடன் பொலிஸில் சரண் !

167 0

கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள  பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 6 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதாக கூறப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர்  சரணடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த துஷ்பிரயோகம் பல நாட்களாக இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை  (4 ) காலை தனது மனைவியுடன் கெக்கிராவ பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.