முப்படையினரால் சமாதானத்தை வலியுறுத்தும் நடைபவனி (காணொளி)

288 0

சமாதானத்தை வலியுறுத்தும் நடைபவனி இன்று முப்படையினரால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது.

விளையாட்டின் மூலம் நட்புறவு என்னும் தொனிப்பொருளில் சர்வதேச ஆயுதம் தாங்கிய இராணுவ விளையாட்டு சபையின் ஏற்பாட்டில் நாட்டின் சமாதானத்தை வலியுறுத்தி சமாதான நடைபவணி இடம்பெற்றது.

விளையாட்டின் மூலம் நட்புறவெனும் சமாதான நடைபவணியானது இலங்கை இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா வழிநடத்தலில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர் இன்று நடைபெற்ற சமாதானத்திற்கான நடைபவனியில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த நடைபவனி யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி சத்திரச்சந்தியை சென்றடைந்து அங்கிருந்து ஸ்ரான்லி வீதி வழியே ஆரியகுளம் சந்தி, வேம்படிச்சந்தியை சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் ஊடாக கோட்டைப்பகுதியை சென்றடைந்தது.

நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி, கடற்படை விமானப்படையின் உயரதிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.