உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் உட்பட பல அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடாக சுமார் 200 கோடி ரூபா வழங்கப்பட வேண்டுமென குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

