ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு – தாக்கப்பட்டது குறித்து முறையீடு

198 0

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பானி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

எதிர்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.

இதனால் சபையை 3 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து முறையிடுவதற்காக மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க சென்றார். அங்கு ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து தாங்கள் தாக்கப்பட்டது குறித்து முறையீட்டார்.