வனவள திணைக்களம் காணிகளை கையகப்படுத்தியமைக்கு பிரதேச செயலகமே காரணம் என பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு 26.10.2022 அன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைப்பாணி மற்றும் மூன்றுமுறிப்பு சிறாட்டிக்குளம் பகுதியில் வனவள திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட வனமாக எல்லையிடப்பட்டுள்ளது.
ஆனால் நீண்டகாலமாக, போருக்கு முன்னரும் குறித்த பகுதிகள் மக்களால் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தால் விவசாய நடவடிக்கை செய்து கொண்டிருந்த மக்கள் மறிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த பகுதிகள் அடங்கலாக (2000ஹெக்டேயர் ) பல இடங்கள் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினரால் எல்லையிடப்பட்டுள்ளது. இதற்கு பிரதேச செயலகமே முழு காரணம்.”என தெரிவித்துள்ளார்.

