பெரும்பான்மை ஆதரவு யாருக்கு – இன்று பலப்பரீட்சை

290 0
தமிழகத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதால், பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் இரு தலைவர்களும் ஈடுபட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத்தில் தமது பலத்தை நீரூபிப்பதற்க்காக புதிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கிடையே போட்டி நிலவுகின்றது.
சட்டமன்றத்திலுள்ள 124 உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரும்பான்மை பலத்தை தம்மாலும் நிரூபிக்க முடியும் என முன்னாள் முதலமைச்சர் ஓ, பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சிறையில் தனக்கு சிறப்பு வகுப்பு கோரி சசிகலா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களுர் பரப்பன அக்ரஹார சிறையில வைக்கப்பட்டுள் சசிகலாவுக்கு தற்போது சாதாரண வகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறையில், சிறப்பு வகுப்பு தனக்கு வழங்கப்பட வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் முன்னர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அவர் மீளவும் சிறை அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்