யாழில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவினால் அமரர் கௌரி சங்கரின் நினைவு நூல் வெளியீடு

147 0

காலம் சென்ற சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அமரர் திருமதி. கௌரி சங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் நினைவு நூல் வெளியீட்டு விழாவும், அமரர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வும் யாழ், வளம்புரி மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை,கடந்த மாதம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் நினைவு நூல் வெளியீட்டு விழா கொழும்பில் இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.