மெய்வல்லுனர் பயிற்சி முகாம் அடம்பனில் ஆரம்பம்

147 0

2022 ஆம் ஆண்டு  பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கான மெய்வல்லுனர் வதிவிட பயிற்சி முகாம் நேற்று (28) அடம்பன்  ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

குறித்த வதிவிட பயிற்சி முகாம் இன்று நாளை (30)  மாலை வரையிலான மூன்று தினங்கள் இடம் பெற உள்ளது.

குறித்த பயிற்சி முகாமில் கொழும்பு தேசிய மட்ட தரத்திலான 8 பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி  பெற்ற 12 வயது தொடக்கம் 20 வயதிற்குற்பட்ட வீரர்களுக்கு குறித்த பயிற்சி முகாம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.