சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவன்சா நோய் குறித்து எச்சரிக்கை !

224 0

சிறுவர்கள் மத்தியில் இன்புலுவன்சா நோய் அதிகளவில் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் நோய் அறிகுறி உள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், இருமல், வாந்தி மற்றும் தடிமல் இன்புளுவன்சா  நாேயின் பிரதான அறிகுறிகளாகும். மழையுடனான காலநிலை மற்றும் குளிர் காரணமாக இந்த நோய் பரவுவதற்கு பிரதான காரணமாகும்.

அதனால் இவ்வாறான நோய் அறிகுறிகள் உள்ள சிறுவர்களை பாடசாலை மற்றும் மதியநேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்த நோய் அறிகுறி குடும்பத்துக்குள் பரவிச்செல்ல வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன் சிறுவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவுவதில் குறிப்பிடத்தக்களவில் குறைவு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.