மட்டு. கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கண்ணிவெடியை நேற்று புதன்கிழமை (ஒக் 26) இராணுவத்தினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
விமானப்படை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று மாலை இராணுவத்தினருடன் விமானப்படை புலனாய்வுப் பிரிவினர் இணைந்து ஈரளக்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கண்ணிவெடியை மீட்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை இந்தப் பகுதி கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

